ஜெயராஜ் அன்ன பாக்கியம் மகளிர் கல்லூரியின் மூன்றாம் நாள் நாட்டு நல பணித்திட்ட முகாம் …
தேனி மாவட்டம் பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் தன்னாட்சி கல்லூரி, நாட்டு நலப் பணிதிட்டம் முகாமில் மூன்றாவது நாளான 16.11.2024 அன்று அணி எண் 11, ஜே.கே. காலனியில் காலை 10.00 மணியளவில் இளையோரின் எதிர்கால வாழ்வும் கனவும் என்பதினை பற்றிய கருத்துகள் பரிமாறப்பட்டது.
இதில் அப்பாஸ் மைதீன், அதிமுக இளைஞர் இளம் பெண்கள் பாசறை, மாவட்டச் செயலாளர், பிஸ்மில்லாஸ் புரோட்டீன்ஸ் உரிமையாளர், தாமரைகுளம், சிறப்பு விருந்தினிராக கலந்துக் கொண்டு கனவு என்பது நம் வெற்றியை உணர்த்திக் கொண்டேயிருப்பது ஆகும், உயரிய சிந்தனையோடு வாழ வேண்டும், நம் வாழ்வில் முன்மாதிரியாக நம்டமுடைய பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்காக இருக்க வேண்டும்.
மேலும் பெற்றோரின் தியாகத்தை நாம் உணர வேண்டும், பொழுதுபோக்கு ஊடகங்களை பொழுதுபோக்கு நோக்கத்துடன் பயன்படுத்த வேண்டும். மேலும் தங்கம் போல் மின்ன புடமிடபட தயாராக இருக்க வேண்டும் போன்ற கருத்துகளை மாணவிகளிடம் பகிர்ந்துகொண்டார்கள்இதன் மூலம் மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பயனடைந்தனர்.