கோவை மாவட்டம் துடியலூர் அருகே உள்ள கவுண்டம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள புனித ஜான் போஸ்கோ ஆலயத்தில் குழந்தைகள் தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இம்மாதம் கடந்த 14ஆம் தேதி இந்திய முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த நாள், இந்தியாவில் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
சிறுவர் சிறுமிகளை ஊக்குவிக்கவும், அவர்களின் திறமைகள் வெளிக்கொண்டு வரவும் இன்று பங்கு தந்தை மற்றும் பங்கில் அமைந்துள்ள அன்பியங்கள், மறைக்கல்வி ஆசிரியர்கள் சார்பில் குழந்தைகளுக்கான குழந்தைகள் தின விழா நடைபெற்றது.
குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில், மறைக்கல்வி ஆசிரியர்கள் நாடகம் மற்றும் நடனம் ஆடி குழந்தைகளை உற்சாகப்படுத்தினர்.
விழாவில் குழந்தைகள் அனைவரும் கிறிஸ்தவ புனிதர்களின் வேடமிட்டு வந்தது பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியானது புனித ஜான் போஸ்கோ ஆலயத்தின் பங்குத்தந்தை ஏ. டி. எஸ். கென்னடி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கோவை மாவட்டத்தின் அருட்தந்தை பிராங்கிளின், அருட் சகோதரர் ஜான் போஸ்கோ உள்ளிட்டோர் கலந்து கொண்டு இவ்விழாவினை சிறப்பித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் ஜான் போஸ்கோ ஆலயத்தின் பங்கு மக்கள் மற்றும் ஆலயத்தில் உள்ள அன்பிய குழுக்கள் மற்றும் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.