மதுரை மாவட்டத்தில் வாக்காளர் வரைவுப் பட்டியல் திருத்தப் பணிகளுக் கான சிறப்பு முகாம் 1,165 வாக்குச் சாவடி மையங்களில் நடைபெற்றது.
மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதி களுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த மாதம் 29-ம் தேதி வெளியிடப்பட்டது.
2025-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியைத் தகுதி நாளாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்தப் பட்டியல், பொதுமக் கள் பார்வைக்கு வைக்கப்பட் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், தொகுதி மாற்றம் கோருதல், முக வரி மாற்றம் செய்தல் போன்ற பணிகள் தொடர்புடைய வட்டாட்சியர் அலுவலகங்கள், வாக்குச் சாவடி மையங்கள், மாந கராட்சி மண்டல அலுவல கங்களில் வருகிற 28-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்தப் பணியை விரைவுப் படுத்தும் வகையில், நவ. 16, 17, ஆகிய தேதிகளில் வாக்குச் சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. மதுரையில் புதிய வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம் விளாங்குடி, காமாட்சி நகர்,ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இரு நாட்கள் நடைபெற்றது.
புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல்,
பெயர் திருத்தம், முகவரி மாற்றம் ஏற்பாடுகளை, விளாங்குடி 20வது வார்டு மாமன்ற உறுப்பினர் நாகஜோதிசித்தன் , மதுரை மேற்கு பகுதி கழகச் செயலாளர் கல்விக்குழு உறுப்பினர் விளாங்குடி கே.ஆர்.சித்தன் உட்பட கட்சி நிர்வாகிகள் செய்திருந்தனர்.
மதுரை மாவட்டத்தில் 1,165 வாக்குச் சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்கான சிறப்பு முகாம் இரு நாட்கள் நடைபெற்றது. பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், முகவரி மாற்றம் கோரு தல் உள்ளிட்டவற்றுக்காக வாக் காளர்கள் இந்த முகாம்களில் மனுக்களை அளித்தனர்.