திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சி ஊழியர்கள் மற்றும் என் எம் ஆர் ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
ஊராட்சிகளில் பணிபுரியும் ஓ எச் டி ஆபரேட்டர்களுக்கு மாதாமாதம் ஊதிய தொகையினை நிலுவைத் தொகையுடன் வழங்கிட கோரியும் தமிழக அரசு அறிவித்த ஏழாவது ஊதிய குழு அறிக்கையின்படி நிலுவைத் தொகையினை வழங்கிடவும் ஊராட்சிகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு அரசு அறிவித்த அகவிலைப்படி இடம் சம்பளத்தை வழங்கிடவும் தூய்மை காவலர்களுக்கு மாதம் அஞ்சாம் தேதிக்குள் சம்பளத்தை வழங்கிடவும் தாட்கோ மூலம் நல வாரிய அட்டை வழங்கிட வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு டி சுப்பிரமணியன் வலங்கைமான் ஒன்றிய செயலாளர் தலைமை வகித்தார் இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்டத் தலைவர் எம் கே என் அனிபா மாவட்ட பொருளாளர் ஜி ரகுபதி நீடாமங்கலம் பெரியசாமி மகேந்திரன் கொடவாசல் காத்தலிங்கம் ராஜேந்திரன் மாவட்ட பொருளாளர் இரா மாலதி பி தனுஷ்கோடி கே சிவசுப்பிரமணியன் நன்னிலம் செல்வராஜ் கொரடாச்சேரி சண்முகம் ராஜா திருத்துறைப்பூண்டி இளையராஜா திருத்துறைப்பூண்டி நாகை எண் மன்னார்குடி தனபால் கிராம ஊராட்சி சேர்ந்த மாவட்ட செயலாளர் காமராஜ் லோகநாயகி மாநில ஒருங்கிணைப்பு குழு ஆறுமுகம் கலியமூர்த்தி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்