கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520.
பல்லடம் அருகே முழுமையாக செயல்பாட்டிற்கு வராத நுண் உர மையம்
மழைநீர் தேங்கி இருப்பதால் கொசு உற்பத்தியாகும் அவலம்…..
கண்டுகொள்ளுமா நகராட்சி நிர்வாகம்…….
திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சிக்குட்பட்ட தாராபுரம் சாலை மாதப்பூர் கிராமத்திற்குட்பட்ட பகுதியில் பல்லடம் நகராட்சியின் நுண் உர மையம் அமைந்துள்ளது.2018-19 ஆம் ஆண்டு தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சுமார்68.50 லட்சம் மதிப்பீட்டில் இந்த நுண் உர மையம் திறக்கப்பட்டது.
இந்த நிலையில் பல்லடம் மற்றும் பல்லடம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளான பணப்பாளையம், பச்சாபாளையம், வடுகபாளையம், பல்லடம் நகரப் பகுதி உட்பட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து குப்பைகள் குவியல் குவியலாக இங்கு வந்து கொட்டப்படுகிறது
மேலும் இந்த நுண் உரம் மையம் அமைந்துள்ள பகுதியை சுற்றிலும் மழை நீர் தேங்கி இருப்பதால் கொசுக்கள் உற்பத்தியாகும் சூழல் நிலவி வருகிறது
மேலும் குப்பைகள் அங்கங்கே கொட்டப்படுவதால் வாகன ஓட்டிகள் அவ்வழியே செல்ல முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசுகிறது. மேலும் நுண் உரம் மையமானது இன்றளவும் செயல்பாட்டிற்கு வரவில்லை என அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்
மேலும் மக்கும் மற்றும் மக்கா குப்பைகளை தனித்தனியே பிரித்து இந்த நுண் உரம் மையத்தை உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பது அப்பகுதி மக்கள் எதிர் பார்ப்பாக உள்ளது.