கும்பகோணம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
கும்பகோணத்தில் அனைத்து டாக்ஸி வேன் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம்….
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் காந்தி பூங்கா எதிரில் தமிழக சுற்றுலாத் துறை சார்பில் கோயில்களுக்கு சென்று வரக்கூடிய வகையில் திட்டங்களை உருவாக்கி அதில் உள்ளூர் சுற்றுலா ஆட்டோ டாக்ஸி ஏன் வாகனங்களை இணைத்து இயக்கும் வகையில் புதிய திட்டத்தை ஏற்படுத்தவும், நவகிரக சுற்றுலா பேருந்து திட்டத்தை கும்பகோணம் வட்டார டாக்ஸி வேன் ஓட்டுனர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காத வகையில் வாரத்தில் ஒரு நாள் ஒரு பேருந்து என திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டியும் , நவகிரக சுற்றுலா ஆன்லைன் முப்பதில் உள்ளூர் சுற்றுலா வாகனங்களுக்கு பகிர்ந்துஅளிக்கும் வகையில் திட்டத்தை உருவாக்கி விடவும்,
நவகிரக அரசு பேருந்துகளுக்கு பலம் அனைத்து சலுகைகளும் உள்ளூர் சுற்றுலா வாகனங்களுக்கு வழங்கிடவும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி
சிஐடியு தொழிற்சங்கம் மற்றும் அனைத்து ஓட்டுனர்கள் உரிமையாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் 300-க்கும் மேற்பட்டோர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.