கும்பகோணம் செய்தியாளர்
ஆர். தீனதயாளன்
கும்பகோணத்தில் தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சிறப்பு திட்டங்களுக்கான திட்டத்தை உடனடியாக தமிழக அரசு திரும்ப பெற வலியுறுத்தி விவசாயிகள் மனுநொடிசை இயற்கை முற்பட்ட போது போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது…

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தலைமை அஞ்சலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரல் ஒப்புதல் அளிக்கப்பட்ட தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சிறப்பு திட்டங்களுக்கான சட்டத் திருத்தத்தை உடனடியாக தமிழக அரசு திரும்பப் பெற வலியுறுத்தி மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்டத் துணைத் தலைவர் ராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது.
இதில் ஏஐடியுசி மாநில செயலாளர் தில்லைவனம், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சாமு. தர்மராஜன், விவசாயிகள் சங்க மாவட்ட துணைச் செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தின் போது சட்டத்திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி கையில் வைத்திருந்த நோட்டீசை விவசாயிகள் எரிக்க முற்பட்டனர்.
உடனடியாக போலீசார் தடுத்து நிறுத்தினர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கையில் கொடியுடன் கண்டனம் முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.