C K RAJAN
Cuddalore District Reporter
9488471235
கடலூர் மாவட்ட கிராம சபை கூட்டங்களை பொது இடங்களில் பொதுமக்களோடு நடத்திட மாவட்ட ஆட்சித் தலைவர் சி பி ஆதித்யா செந்தில்குமார் அறிவுறுத்தல்.
கடலூர்
கிராம சபை கூட்டம் – கடலூர் மாவட்டத்தில் 01.11.2024 உள்ளாட்சிகள் தினத்தன்று நடைபெற இருந்த கிராம சபைக் கூட்டமானது 23.11.2024 அன்று காலை 11.00 மணி அளவில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடைபெறவுள்ளது.
கிராம சபைக் கூட்டத்தினை ஊராட்சியின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றியும், மதசார்புள்ள எந்தவொரு வளாகத்திலும் நடத்தாமல் பொதுவான இடங்களில் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்கும் வகையில், கிராம சபை கூட்டங்கள் நடைபெறும் இடம், நேரம் குறித்து முன்கூட்டியே ஊராட்சிப் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தி நடத்தும்படி அனைத்து ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
23.11.2024 அன்று நடைபெறவுள்ள கிராம சபை கூட்டத்தில் கிராம ஊராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்களை சிறப்பித்தல், கிராம ஊராட்சியில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் மகளிர் சுய உதவிக்குழுக்களை கௌரவித்தல், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தூய்மை பாரத இயக்க (ஊரகம்) திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், ஜல் ஜீவன் இயக்கம், தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் மேம்பாட்டு திட்டம், கூட்டாண்மை வாழ்வாதாரம் மற்றும் இதர பொருட்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. இக்கிராம சபை கூட்டத்தில் சம்மந்தப்பட்ட ஊராட்சிகளின் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.