தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணைக்கு செல்லும் சாலையில் உள்ள விக்டோரியா நினைவு அரசு மேல் நிலைப்பள்ளிக்கு சொந்தமான விளையாட்டு மைதானத்தில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.35லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கூடைப்பந்து மைதானமும் , ஆண்கள் மற்றும் பெண்கள் கழிவறை,மற்றும் கபடி மைதானம் ஆகியவை புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழாவை பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் K. S சரவணக்குமார் எம்.எல்.ஏ தலைமைதாங்கினார். தென்கரை பேரூராட்சிதலைவர் நாகராஜ்,பெரியகுளம் நகர் மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விளையாட்டு மைதானத்தையும்,கழிவறையும் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் தமிகாகல்தானா, தி.மு.க. நகர செயலாளர் முகமது இலியாஸ் தாமரைக்குளம் பேரூராட்சி தலைவர் பால்பாண்டி, பள்ளி தலைமை ஆசிரியர் கோபிநாத், நகர பொருளாளர் சுந்தர பாண்டியன், மாவட்ட பிரதிநிதி செந்தில், நகரத் துணைச் செயலாளர் சேது ராமன் அரசு ஒப்பந்ததாரர் சிராஜுதீன் நகராட்சி மற்றும்பேரூராட்சி கவுன்சிலர்கள், நகரின் முக்கிய பிரமுகர்கள் தி.மு.க.நிர்வாகிகள், விளையாட்டு வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.