வந்தவாசி கிளை நூலகம் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் 57 ஆவது தேசிய நூலக வார விழா நடைபெற்றது. நூலக வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு வட்டார கல்வி அலுவலர் ஆர்.செந்தமிழ் தலைமை தாங்கினார்.

கிளை நூலகர் சத்ய நாராயணன், வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்க தலைவர் பீ.ரகமத்துல்லா, வந்தவாசி வட்ட தமிழ்ச் சங்க செயலாளர் ஆ.மயில்வாகனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக, வந்தவாசி வட்டாட்சியர் ஆர்.பொன்னுசாமி பங்கேற்று, புத்தக வாசிப்பின் அவசியம் குறித்தும், மேலும் மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் கருவி கல்வி ஒன்றே எனவும் மாணவர்களுக்கு வலியுறுத்தினார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை ஆ. சித்ரா, கலைஞர் முத்தமிழ் சங்க தலைவர் வந்தை குமரன், தமிழ் செம்மொழி மன்ற நிர்வாகி கேப்டன் மு.பிரபாகரன், நூலகர் ஜோதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்வில் ரெட் கிராஸ் சங்க உறுப்பினர் அ. ஷாகுல் அமீது, வீனஸ் வித்யாலயா பள்ளி நிர்வாகி ரமேஷ் கண்ணா உள்ளிட்ட நூலக வாசிப்பார்கள் பலரும் பங்கேற்றனர்.
பேச்சு , ஓவியம், கவிதை, திருக்குறள் உள்ளிட்ட பல்திறன் போட்டிகளில் பங்கேற்று சிறப்பிடம் பெற்ற வீனஸ் வித்யாலயா பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இறுதியில் ஓய்வுபெற்ற நூலக உதவியாளர் மு.ராஜேந்திரன் நன்றி கூறினார்.
செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.