விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பி.எஸ்.கே. பார்க் தெருவை சேர்ந்த இருளப்பன் என்பவரது மகன் சின்னப்பராஜ் வயது 29. இவர் அம்பலபுளி பஜார் நாலு முக்கு ரோடு பகுதியில் புகையிலை குட்கா இருசக்கர வாகனத்தில் வைத்து விற்பனை செய்து கொண்டிருந்ததாக தகவல் கிடைத்தது.
அதன் பேரில்
தெற்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் கவதம்விஜய் மாறுவேடத்தில் சென்று சின்னப்பராஜை பிடித்து 19 பாக்கெட் புகையிலை ரூ. 2300- பெறுமானது பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இரு சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு 15 நாட்கள் சின்னப்பராஜ் காவலில் வைக்கப்பட்டார்.
இதுகுறித்து எஸ்ஐ.கவுதம்விஜய் கூறும்போது அரசால் தடைசெய்யப்பட்ட போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் எஸ்பி கண்ணன் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு கடைகள்,
பள்ளிகள் அருகில் என ஏறாலமான வழக்குகள் Upset செய்யப்பட்டு வரப்படுகிறது ஆனாலும் தற்போது பைக்கில் வலம் வந்து நூதன முறையில் விற்பனை செய்வதாக தெரிந்து தீவிர நடவடிக்கைகளை எடுத்துவருகிறோம் என்றார்.