புளியங்குடி,
தென்காசி மாவட்டம் புளியங்குடி ஆர்.சி மேல்நிலைப் பள்ளியில், மாணவ மாணவியருக்கு தமிழக அரசின் சார்பில் இலவச சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் அருட்தந்தை எட்வின் ராஜ் தலைமை வகித்தார்.
தலைமை ஆசிரியை லீமா ரோஸ் வரவேற்புரை ஆற்றினார்.
நகர்மன்ற உறுப்பினர்கள் தங்கம் ஜோதி பாண்டியன், கவிதா, மற்றும் பள்ளி நலக் குழு தலைவர் பால்ராஜ், நகர திமுக இளைஞரணி சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற புளியங்குடி நகர்மன்ற துணைத் .தலைவரும்,நகர திமுக செயலாளருமான அந்தோணிசாமி மாணவ, மாணவியருக்கு இலவச சைக்கிள்கள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஆசிரிய ஆசிரியைகள், மாணவ, மாணவியர், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.