ரூ 16 லட்சம் மதிப்பீட்டில் 30 ஆயிரம் லிட்டர் கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு பூமி பூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார் அரூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வே.சம்பத்குமார்.
தருமபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செங்குட்டையில் ரூ 16லட்சம் மதிப்பீட்டில் 30 ஆயிரம் லிட்டர் கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு பூமி பூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார் அரூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வே.சம்பத்குமார்.
நீண்ட நாட்களாக செங்கோட்டை கிராமத்தில் தண்ணீர் வசதி இல்லாமல் தவித்து வந்த நிலையில் கிராம மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக அரூர் சட்டமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 16 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு பூமி பூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார் அரூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வே.சம்பத்குமார்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் எம்.கே மகாலிங்கம், கம்பைநல்லூர் நகர செயலாளர் கே.கே.தனபால்,அதிமுக கட்சி நிர்வாகிகள்,தொண்டர்கள்,செங்கோட்டை கிராம மக்கள் என பலர் கலந்து கொண்டனர்