எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழியில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து கண்டன ஆர்ப்பாட்டம். 3 நாட்கள் நீதிமன்ற பணிகளை புறகணிக்கின்றனர்.

ஓசூர் வழக்கறிஞர் கண்ணன் மீது நடத்தப்பட்ட கொலை வெறி தாக்குதலை கண்டித்தும் வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக மத்திய, மாநில அரசுகள் இயற்றிட வலியுருத்தியும் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு சங்கத்தின் தலைவர் ஜீவானந்தம் தலைமையில் செயலாளர் மணிவண்ணன் உட்பட ஏராளமான வழக்கறிஞர்கள் பங்கேற்று கண்டன முழக்கங்கள் எழுப்பினர். சம்பவத்தை கண்டித்து இன்று முதல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு சீர்காழி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நீதிமன்ற பணிகளிலிருந்து விலகி போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.