தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை சார்பாக மருத்துவ முகாம் நடைபெற்றதுகோவில் பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்…..
திருவாரூரில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் சார்பாக மருத்துவ முகாம் நடைபெற்றது.. திருவாரூரில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த மருத்துவ முகாமை இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் குமரேசன் துவக்கி வைத்தார்..
இந்த மருத்துவ முகாமில்.. கோவில்களில் பணி புரியும் ஊழியர்களுக்கு இலவசமாக முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டது..
இந்த பரிசோதனையில் இரத்த அழுத்தம், நீரழிவு பரிசோதனை, இருதய பரிசோதனை, செய்யப்பட்டது. தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை மருத்துவர்கள் உடல் பரிசோதனை செய்து மருந்துகள் வழங்கினர்.
இந்த நிகழ்வில் இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் குமரேசன், திருவாரூர் உதவி ஆணையர் சொரிமுத்து, நாகப்பட்டினம் துணை ஆணையர் திருமதி ராணி மற்றும் கோவில் செயல் அலுவலர்கள் மற்றும் கோவில் ஆய்வர்கள் கலந்து கொண்டனர்.