விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சி.நகர்மன்ற தலைவி பவித்ராஷியாம்,
ஆணையாளர் நாகராஜன் ஆகியோரின் ஆலோசனையின் பேரில் நகர் முழுவதும் சுகாதார ஆய்வாளர் மற்றும் ஊழியர்கள் துப்புரவு பணியாளர்கள் அடங்கிய குழுவினர், பொதுமக்களிடம் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் உறுதிமொழி ஏற்றுவருகின்றனர்,இதுகுறித்து அந்த குழுவிணர்கள் கூறுகையில் ராஜபாளையம் நகராட்சியை பொறுத்தவரை,துப்புரவு தொழிலாளர்கள் வாகனங்களில் வீடு வீடாக நேரில் சென்று குப்பைகளை பெற்று அதை மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம்பிரித்து திட்க்கழிவு மேலாண்மை நிலையத்தில் ஒப்படைக்கின்றனர்.ஆனாலும்.பொதுமக்களில் சிலர்,குப்பைகளை நீர் நிலைகள்.கழிவு நீர் கால்வாய்கள்,என கண்ட இடத்தில் கொட்டிவிடுவதால்,காழ்வாய் அடைப்பு,துர்நாற்றம் நோய்தொற்று அபாயம் ஏற்பட காரணமாகிவிடுகிறது ஆகவே தெருத்தெருவாக சென்று பொது இடங்களில் பொதுமக்களின் ஒத்துழைப்பு வேண்டி இந்த விழிப்புணர்வு உறுதிமொழிகளை எடுத்து வருகிறோம் என்றனர்.
