போடிநாயக்கனூர் சி.பி. ஏ என்ற ஏல விவசாயிகள் சங்க கல்லூரியில் ஆங்கில மொழி ஆய்வுக்கூடம் எம் எல் ஏ ஒ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தமிழகம் கேரளாவை இணைக்கும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சி பி ஏ என்ற ஏல விவசாயிகள் சங்க கல்லூரி வளாகத்தில் ஆங்கில மொழி ஆய்வுக்கூடம் மற்றும் இ.கண்டனெட் ஸ்டுடியோ ஆகியவற்றை போடி எம் எல் ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்டவைகளை கல்லூரி மாணவ மாணவிகளின் பயன்பாட்டிற்கு தமிழக முன்னாள் முதல்வரும் போடி சட்டமன்ற உறுப்பினர் ஒ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்

இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரியின் தலைவர் எஸ் வி சுப்பிரமணியன் தலைமை வகித்தார் கல்லூரி செயலாளர் மற்றும் தொடர்பாளர் ஆர் புருஷோத்தமன் உப தலைவர் எஸ் ராமநாதன் நிர்வாக குழு உறுப்பினர்கள் ஏல விவசாயிகள் சங்க நிர்வாகஸ்தர்கள் கல்லூரியின் முதல்வர் முனைவர் எஸ் .சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

ஆங்கில மொழி ஆய்வுக்கூடத்தில் கல்லூரி மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் ‌லேடி ஹவாக் கணிப்பொறி இன்ஸ்டால் செய்யப்பட்டு மாணவ மாணவிகளின் பயன்பாட்டிற்க்கு கொண்டுவரப்பட்டது. ஆய்வு கூடத்தை கல்லூரி மாணவ மாணவிகளின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து தமிழக முன்னாள் முதல்வர் போடி சட்டமன்ற உறுப்பினர் ஒ. பன்னீர்செல்வம் பேசும்போது கல்லூரியில் திறக்கப்பட்டுள்ள ஆங்கில மொழி ஆய்வுக்கூடம் மூலம் கிராமப்புற கல்லூரி மாணவ மாணவிகள் ஆங்கில வழிக் கல்வி முறையை வளர்ச்சி அடைய உதவும் என்ற றார்.

கல்லூரி செயலாளர் மற்றும் தொடர்பாளர் ஆர் புருஷோத்தமன் பேசும்போது கல்லூரியின் ஆங்கில மொழி ஆய்வு கூடத்திற்கு 30 கணிப்பொறிகள் போடிநாயக்கனூர் சட்டமன்ற உறுப்பினர் தனது சொந்த நிதியிலிருந்து வழங்கியது குறித்து பாராட்டி பேசினார். ஏல விவசாயிகள் சங்க நிர்வாகஸ்தர் எஸ். ஞானவேல் நன்றி உரையாற்றினார்

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலின்படி கண்காணிப்பாளர் யுவராஜா மற்றும் ஆங்கிலத்துறை பேராசிரியர்கள் அலுவலர்கள் வெகு சிறப்பாக செய்து இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *