அரசு மதுபான கடை வைக்க பெண்கள் எதிர்ப்பு போலீசார் குவிப்பு
பாப்பிரெட்டிப்பட்டி நவம்பர் 22 பொம்மிடி அருகே புதிதாக அரசு மதுபானக் கடை வைப்பதற்கு அப்பகுதி பொதுமக்களும் பெண்களும் எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்
தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே உள்ள பயர் நத்தம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடை நெடுஞ்சாலை வாகன ஓட்டிகளுக்கும் அப்பகுதி மக்களுக்கும் குடிகாரர்களால் பெரும் தொல்லை ஏற்படுவதாகவும் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாக கூறி இப்பகுதி மக்கள் பல்வேறு முறை போராட்டங்கள் நடத்தினர்
குறிப்பாக பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி நேரடியாக போராட்டத்தில் இறங்கி அப்ப மக்களோடு இணைந்து எதிர்ப்பு தெரிவித்ததால் தற்போது அந்த கடை இடம் மாற்றம் செய்ய அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர்
இந்த நிலையில் பயர் நத்தம் பகுதியில் இடமாற்றம் செய்யப்படும் அரசு மதுபான கடைகும்மிடி அருகே உள்ளசாலை வலசுகோட்டைமேடு என்ற இடத்தை அதிகாரிகள் தேர்வு செய்து கடை வைப்பதாக இப்பகுதி மக்களுக்கு செய்தி பரவியது இதனால் இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 50க்கும் மேற்பட்ட பெண்கள் திடீரென இன்று காலை கடை அமைக்க இருப்பதாக கூறப்படும் கடை முன்பு திரண்டு எதிர்ப்பு தெரிவிக்க துவங்கினர்
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொம்மடி காவல் உதவி ஆய்வாளர் விக்னேஷ் தலைமையிலான காவல்துறையினர் இப்பகுதியில் குவிக்கப்பட்டன
மேலும் வருவாய்த்துறை டாஸ்மார்க் அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர் அப்போது எக்காரணத்தை கொண்டும் இந்தப் பகுதியில் அரசு மதுபான கடை திறக்க கூடாது இப்பகுதியில் உள்ள மக்களின் நிம்மதி கேட்டு விடும் ஆகவே அரசு மதுபான கடை இங்கே வர வேண்டாம் என கோஷம் எழுப்பி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்