திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுக்கா 52.புதுக்குடி கிராமத்தில் அமர்ந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ சௌந்திர நாயகி அம்பிகை சமேத ஶ்ரீ தான்தோன்றீஸ்வர ஸ்வாமி ஸ்ரீ பிரம்ம சன்டேஸ்வரர் ஸ்ரீ அஷ்ட புஜ கால பைரவர் ஆலயத்தில் அஷ்ட பைரவ மஹா யாகம் நடைபெற்றது.

கார்த்திகை மாதம் வரக் கூடிய அஷ்டமி ஜென்மாஷ்டமியை எனவும் காலபைரவாஷ்டமி என பெயர் பெற்றது.
அதனையொட்டி வருடாந்தோறும் மூன்று நாட்கள் நான்கு கால மஹா யாகமாக நடைபெறுவது வழக்கம் அதன் படி இந்த வருடம் கார்த்திகை மாதம் 6,7,8ந்தேதியான 21.11.2024 முதல் 23.11.2024 வியாழன், வெள்ளி, சனி கிழமை மூன்று தினங்கள் நான்கு கால யாக பூஜைகளாக நடைபெற்று மஹாபூர்ணாஹூதி நடைப்பெறும் மேலும் அஷ்டபுஜ கால பைரவருக்கு மஹா அபிஷேகம் நடைபெறும் அதன் படி நேற்று இரவு முதல் கால யாக பூஜை நடைபெற்று அஷ்ட புஜ கால பைரவருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்து உற்சவ மூர்த்தி வீதியுலா காட்சியும் நடைபெற்று மஹா தீபாராதனை நடைபெற்றது.
அதன் பிறகு பக்தர்களுக்கு அருட் பிரசாதங்களும் அன்னதான பிரசாதங்களும் வழங்கப்பட்டது.
மேலும் பக்தர்களுக்கு சுவாமி பாதத்தில் வைத்து பூஜிக்கபட்ட சிகப்பு கையிறு கையில் கட்டப்பட்டது.
அஷ்ட பைரவ மஹா யாகத்தை பைரவப்ரியன் கயிலைஸ்ரீ சேங்காலிபுரம் பைரவசித்தர் சிவஸ்ரீ ஹரி ஹர சிவாச்சாரியார் ஏற்பாட்டில் நடைபெற்றது. மேலும் ஆலய அர்ச்சகர் பைர சுந்தரமூர்த்தி சிவாச்சாரியார் மற்றும் சர்வசாதகமாக கும்பாபிஷேக சக்ரவர்த்தி திருக்கண்ணங்குடி பாலாமணி சிவாச்சாரியார் அவருடன் கணேஷ்குமார் சிவாச்சாரியார் நடத்தினர்.
விழாவில் சிறப்பு விருந்தினராக திருவாரூர் கமாலம்பிகா கூட்டுறவு வங்கியின் தலைவர் ஆர்.டி.மூர்த்தி குடும்பத்தினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். குறிப்பாக மூன்று தினங்களும் பக்தர்களுக்கு அன்னதானமும் கையில் சிகப்பு முடிக்கயிறு கட்டும் நிகழ்வு தொடர்ந்து நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.