தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் மதுரை நீச்சல் வீரர் சரபமூர்த்தி சாதனை…
இந்திய நீச்சல் சங்கம் சார்பாக மத்தியபிரதேசம் மாநிலம் போபாலில் 20 வது மாஸ்டர் தேசிய நீச்சல் போட்டி நடைபெற்றது.
இதில் பங்கேற்ற மதுரையை சேர்ந்த நீச்சல் வீரர் சரபமூர்த்தி போட்டியில் கலந்து கொண்டு 400 மீ மற்றும் 200 மீ ப்ரீ ஸ்டைல் மூன்றாம் இடம் பெற்று இரண்டு வெண்கல பதக்கம் வென்றார். வெற்றி பெற்ற நீச்சல் வீரரை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மதுரை மண்டல முதுநிலை மேலாளர் வேல்முருகன்,
மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, மாவட்ட நீச்சல் சங்க தலைவர் ஸ்டாலின் ஆரோக்கிய ராஜ், செயலாளர் கண்ணன் பொருளாளர் அமிர்தராஜ்,பயிற்சியாளர் விஜயக்குமார் ஆகியோர் பாராட்டினர்.