தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் வைத்து மூன்று தினங்களுக்கு முன்பு மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது
அந்த முகாமில் பெறப்பட்ட மனுக்களுக்கு இன்று தீர்வு காணப்பட்டது 15 பேருக்கு அதற்கான ஆணை வழங்கினார் அதன் பின்பு மேயர் ஜெகன் பேசுகையில் மாநகராட்சி சேவை பாராட்டு 27 மனுக்கள் வந்துள்ளது மக்களுக்கு தேவையான சாலை வசதி சுகாதார வசதி பெயர் மாற்றம் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது
மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளது உள்ளாட்சி பதவியேற்று மூன்று வருடங்கள் ஆகிறது நல்ல மழை பெய்துள்ளது 10 மணி நேரம் பெய்துள்ளது கடந்த முறை மழை நீர் தேங்கிய பகுதிகளில் இந்த முறை மழைநீர் தேங்க வில்லை இந்த முறை மூன்று வார்டுகளில் மட்டும் மழை நீர் தேங்கியுள்ளது ரோடுகளில் தேங்கி இருந்த நீர் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது கேரிப்பை தான் மூடை மூடையாக வடிகாலில் தேங்கியுள்ளது இந்த கேரிபை அடைப்பு ஏற்பட்டதால் மழை நீர் செல்ல வழி இல்லாமல் அடைப்பு ஏற்பட்டது இந்த மூன்று வார்டுகளில் 25 சதவீதம் தனி நபர் காலியிடங்கள் உள்ளது அந்த இடங்களில் தான் மழை நீர் தேங்கியுள்ளது இடத்தின் உரிமையாளரை கண்டறிந்து காலி இடத்தில் மணல் அடிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது இது மழைக்காலம் தான் வரும் காலங்களில் மழைநீர் தேங்காத வகையில் ஆங்காங்கே மோட்டர் வைக்கப்பட்டுள்ளது அதுபோல சுகாதாரத் துறை பணியாளர்கள் 60 வார்டுகளிலும் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள் மழை நீர் எங்கேயாவது தேங்கி இருந்தால் பொதுமக்களாக உடனடியாக தகவல் தெரிவித்தால் அதனை அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மேயர் ஜெகன் கூறினார் நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் மதுபாலன் கிழக்கு மண்டல உதவி ஆணையர் வெங்கட்ராமன் மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் மற்றும் ஜேஸ்பார் பொதுக்குழு உறுப்பினர் கோட்டு ராஜா மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்