வணிகர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 18 சதவீத ஜிஎஸ்டி வரியை ரத்து செய்யக் கோரி திருவாரூரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வாடகை கடையில் வர்த்தகம் செய்யும் வர்த்தகர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் மத்திய அரசு அமுல்படுத்தியுள்ள 18 சதவீத ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும், காப்பீட்டு நிறுவனங்களுக்கு வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் செலுத்தும் பிரிமீயம் தொகைக்கு ஜிஎஸ்டி வரியை முழுமையாக ரத்து செய்ய வேண்டியும் திருவாரூர் தலைமை தபால் நிலையம் முன்பு திருவாரூர் வர்த்தகர்கள் பாதுகாப்பு சங்கம் மற்றும் அனைத்து வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் திருவாரூர் நாகை தஞ்சாவூர் மாவட்டங்களில் இருந்து 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஜிஎஸ்டி வரிவிதிப்புக்கான தங்களை எதிர்ப்பை முழக்கங்களாக மத்திய அரசை கண்டித்தும் உடனடியாக வரி விதிப்பை வாபஸ் பெற வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.