திண்டுக்கல் மாவட்டம் பழனி சாலை முத்தனம்பட்டி அருகே உள்ள PSNA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழாவில் இளநிலை மற்றும் முதுநிலை 400 மாணவ, மாணவிகள் தங்களுக்கான பட்டங்களை பெற்றுக் கொண்டனர். இவ்விழாவில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை, தகவல் தொழில்நுட்பவியல் சார்ந்த மாணவர்களும் தங்களுக்கான பட்டங்களை பெற்றனர்.
இவ்விழாவில் அண்ணா பல்கலைக்கழக தேர்வு வரிசை பட்டியலில் முதல் மூன்று இடங்களை பெற்ற கணினி அறிவியல், பொறியியல் இளநிலை மாணவர்கள் மூவரும், முதுநிலை மாணவர்கள் இருவரும், தகவல் தொழில்நுட்ப துறையில் இளநிலை மாணவர்கள் மூவரும் என எட்டு மாணவர்கள் இடம் பெற்றனர்.
அவர்களுக்கு கல்லூரியின் சார்பாக தங்கப்பதக்கம் வழங்கி சிறப்பித்தனர்.
இவ்விழாவில் புதுதில்லி, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் உறுப்பினர், செயலாளர், பேராசிரியர்.ராஜீவ் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கான பட்டங்களுடன் கூடிய பரிசுகளை வழங்கினார். இவ்விழா கல்லூரியின் தலைவர்.தனலட்சுமி, முதன்மை தலைவர்.ரகுராம் மற்றும் டிரஸ்டி.சூர்யா ரகுராம் ஆகியோரது தலைமையில் நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் முனைவர்.வாசுதேவன் வரவேற்புரை மற்றும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பேராசிரியர்.ராஜீவ் குமார் சிறப்புரையுடன் கல்வியின் அவசியத்தையும், மாணவர்களின் அறிவு வளர்ச்சி தான் நாட்டின் வளர்ச்சி என்றும் மாணவர்கள் சுய வேலைவாய்ப்பை எப்படி உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்பதை எடுத்துக் கூறினார்.
இந்த ஆண்டு கல்லூரி வளாக வேலைவாய்ப்பில் சுமார் 340 மாணவ, மாணவிகளுக்கான தங்கள் படிப்பு முடியும் முன்பே பல்வேறு பண்நாட்டு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.இவ்விழாவில் பட்டங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு PSNA கல்லூரி நிர்வாகத்தினர் சார்பாக தங்களது வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டனர்.