தேனி மாவட்டம் உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உலக பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த முன்னேற்பாடு ஒருங்கிணைப்பு ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்.வி. ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் தாட்சாயினி டிஎஸ்பி செங்குட்டு வேலன் உள் பட அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.