விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வன விரிவாக்க மையத்தில் வைத்து ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் பகுதியில் வைத்து காலநிலை மாற்றம் குறித்த பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடகத்தினருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி பட்டறை நடைபெற்றது
ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் தேவராஜன் தலைமையில் வத்திராயிருப்பு வனச்சரக அலுவலர் கார்த்திக் வரவேற்று பேசினார்
இதில் வன உயிரின ஆராய்ச்சியாளர் மற்றும் காலநிலை மாற்றம் குறித்த ஆராய்ச்சியாளர் நாராயணி சுப்பிரமணியன் கலந்து கொண்டு விளக்க உரையாற்றினார்
காலநிலை பருவ நிலை மாற்றங்களுக்கு ஏற்ப செய்தியாளர்கள் செய்திகளை வழங்குவது குறித்து பட விளக்கங்களுடன் எடுத்து கூறினார். செய்தியாளர்களின் சந்தேகங்களுக்கு பதிலளித்தார். முடிவில் வத்திராயிருப்பு வனச்சரக அலுவலர் ஜெயசீலன் நன்றி கூறினார் பயிற்சி பட்டறையில் ஸ்ரீவில்லிபுத்தூர் வனச்சரக அலுவலர்கள் மற்றும் விருதுநகர் மாவட்ட அளவிலான செய்தியாளர்கள் பங்கேற்றனர்.