மொரப்பூர் சந்தைமேட்டு பகுதியில் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து பட்டியல் இன ஊராட்சி தலைவருடன் கிராம மக்கள் இணைந்து சாலை சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் சந்தைமேட்டு பகுதியில் இன்று ஊராட்சி தலைவர் உமாராணி தலைமையில் கிராம சபை கூட்டம் இன்று நடைபெற்றது. துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவரால் செயல்படுத்த முடியாத திட்டப் பணிகளின் பட்டியலை பட்டியலிட்டு பேனர் மூலம் அச்சடிக்கப்பட்டு முன்வைக்கப்பட்டது.
கிராம சபை கூட்டத்தில் அரசு அறிவித்துள்ள தீர்மானங்களுடன் மொரப்பூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஒத்துழைப்பின்மை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புகளின் படி உரிய காலத்தில் மாவட்ட ஆட்சியரால் உத்தரவு வழங்கப்படாததால் பணிகள் செய்ய இயலாமல் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நிதிகள் பயன்படுத்தாமல் உள்ளதாகவும் நிலுவையில் உள்ள பல்வேறு திட்டப் பணிகளை பட்டியலிடப்பட்டன.
குறிப்பாக ஊராட்சி மன்ற துணைத் தலைவரால் தொகை வழங்க மறுத்து கூறிய காரணங்கள் தொடர்பான விளக்கங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன. மின்மோட்டார் சாலை வசதி பூங்கா குடிநீர் வசதி ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பட்டியலிட்டு காண்பிக்கப்பட்டன.
இது தொடர்பாக ஊராட்சி மன்ற துணைத் தலைவர் இதுவரை எந்த ஒரு கூட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை ஒத்துழைப்பு அளிக்கவில்லை எனவும் ஊராட்சி மன்ற தலைவர் உமாராணி பட்டியல் இனத்தைச் சேர்ந்த நபர் என்பதால் தன் மீது அவ பெயர் ஏற்பட வேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை திட்டங்களை செயல்படுத்த முடியாமல் இருப்பதாக தெரிவித்த ஊராட்சி மன்ற தலைவர் திராவிட மாடல் ஆட்சியில் பட்டியலென பெண் தலைவருக்கு ஏற்பட்ட அவலங்களை தெரிவிக்கும் வகையில் கிராம மக்கள் உடன் இணைந்து சாலை மறியலில் ஈடுபட்டார்.
அப்போது காவல்துறையினர் அவர்களை தடுக்க முயன்றதால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து டிஎஸ்பி கரிகால் பாரிசங்கர் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சுமார் அரை மணி நேரத்திற்கு பின்பு சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் தர்மபுரி கிருஷ்ணகிரி செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டன.