விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஜவகர் மைதானத்தில் விஸ்வகர்ம சார்பில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,
மாநில பொதுச்செயலாளர்
எம்.ஜம்புகேஸ்வரன் தலைமை தாங்கி பேசுகையில்.
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருவிகள் வைத்து தொழில் செய்பவர்கள் அனைவருமே விஸ்வகர்ம பிரிவை சேர்ந்தவர்கள்தான் என்று பேசி நமது ஐந்துணை விஸ்வகர்ம சமுதாயத்தை இழிவு படுத்தியது ஏற்கத்தக்கது அல்ல ஆகவே விஸ்வகர்ம கம்மாளர்களின் உரிமைகளை மீட்டெடுப்போம்,என்றார். நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏறாளமானோர் கலந்துகொண்டு கொடி மற்றும் பதாகைகள் ஏந்தி கோசங்களை எழுப்பினர்.
