தேனி மாவட்டம் வட புதுப்பட்டி நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு கருத்தரங்கம் தேனி மாவட்டம் மக்களின் நன்மதிப்பைப் பெற்ற நாடார் சரஸ்வதி கல்வி குழுமத்தின் ஒரு அங்கமான வட புதுப்பட்டி நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு கருத்தரங்கம் மேனாள் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர் சிவ பிரசாத் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் தலைமைச் செயலாளர் பேசியது தேனி மாவட்டம் இயற்கை எழில் மிகுந்த மாவட்டம் எங்கெல்லாம் போதை பொருள் இல்லையோ அங்கே சண்டைகள் சச்சரவுகள் வாக்குவாதங்கள் கலகங்கள் இருப்பதில்லை அப்படிப்பட்ட உலகம் தான் புதியதோர் உலகமாக இருக்கும் 2000 ஆண்டுகளுக்கு முன்பு மனிதர் வாழ்ந்த வாழ்க்கைக்கும் தற்போது நாம் வாழ்கின்ற வாழ்க்கைக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது

தற்பொழுது மது மாத்திரை கஞ்சா அபின் நிக்கோட்டின் போன்ற போதைப் பொருட்களின் மூலம் மற்றும் சூதாட்டம் ஆன்லைன் கேம்ஸ் கைபேசி சமூக ஊடகங்கள் போன்ற பிற காரணத்தாலும் போதைக்கு அடிமையாகும் நிலை ஏற்படுகிறது போதைப் பொருட்களை முதலில் கட்டாயத்தின் பேரில் ஒரு முறை பயன்படுத்துதல் இரண்டாவதாக அதை மீண்டும் மீண்டும் பயன்படுத்துதல் யூசர் பேஸ் மூன்றாவதாக நமது நடத்தையில் பிரச்சனை ஏற்படும் எனவே போதை பொருட்கள் பற்றி மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்
இவ்வாறு அவர் பேசினார் இதனைத் தொடர்ந்து தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவரும் நாடார் சரஸ்வதி கல்வி குழும நிறுவனங்களின் தலைவருமான கல்வி தந்தை டி ராஜமோகன் பேசும்போது மாணவர்களிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்தி அவர்களின் எதிர்காலத்தைப் பற்றி குறிப்பாக அவர்களின் சிந்தனையை தூண்டும் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை தெரிவித்து அவர்களை நல்வழிவு படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் இதன் மூலம் நமது மாவட்டத்தில் போதைப் பழக்கத்தால் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்கலாம் தற்பொழுது போதை பொருட்கள் சாக்லேட் உள்ளிட்ட பல்வேறு வடிவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது இது குறித்து மாணவர்கள் அனைவருக்கும் உணர்வு ஏற்படுத்தும் விதமாக பள்ளிக்கூட சுற்றுவட்டாரத்தில் 100 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள கடைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் குழந்தைகளின் எதிர்காலத்தை நல்ல முறையில் மாற்றுவதில் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மற்றும் அதிகாரிகளுக்கும் அதிக பங்கு உள்ளது

எனவே தேனி மாவட்டத்தை போதையில்லாத மாவட்டமாக மாற்றி போதையை முற்றிலும் ஒழிக்க நம் அனைவரும் ஒருங்கிணைந்து செயலாற்றுவதற்கான நடவடிக்கையை நாடார் சரஸ்வதி கல்வி குழும நிறுவனங்களின் நிர்வாகிகள் மற்றும் இருபால் ஆசிரியர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும் என கல்வி குழுமத்தின் அதிபர் என்ற முறையில் உத்தரவிட்டுள்ளேன் இதன் மூலம் எங்கள் கல்வி குழுமத்தில் படிக்கும் அனைத்து மாணவ மாணவியர்களும் போதை பழக்கத்தை நினைத்து கூட பார்க்காத அளவிற்கு கல்வியை போதிப்பது போல் போதைப் பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்தும் போதித்து வருவது எங்கள் கல்விக் குழுமத்தின் சிறப்பு இவ்வாறு அவர் பேசினார்

இந்த போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி பெரியகுளம் சப் கலெக்டர் ரஜத் பீடன் உதவி ஆணையர் க. ரவிச்சந்திரன் கலால் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இந்திராணி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சந்தியா கல்லூரி முதல்வர் சித்ரா உள்பட கல்லூரி இருபால் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு போதைப் பொருள் குறித்து விழிப்புணர்வு பெற்றனர்

இந்த நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா நல்லதம்பி வெகு சிறப்பாக செய்திருந்தார்