வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடியில் தமிழகம் தழுவிய விவசாய சங்கங்களின் பிரச்சார இயக்கம் நாளை நடைபெறுவதை முன்னிட்டு தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடியில் விவசாய சங்கங்கள் சார்பாக விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், பயிர் காப்பீடு திட்டத்தை அரசு ஏற்று நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை ஒன்றிய அரசின் மக்கள் விரோத கார்ப்பரேட்ஆதரவு செயல்பாடுகளை கண்டித்துஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும்சிபிஎம் கட்சியின்விவசாய சங்கங்களில் சார்பில் தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கம் நாளை நடைபெறுவதை முன்னிட்டு ஆலங்குடி கடைவீதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விவசாய சங்க தலைவர் கலியபெருமாள், ஒன்றிய தலைவர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலையில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
வலங்கைமான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் எஸ். எம். செந்தில்குமார் தெருமுனைப் பிரச்சாரத்தை துவக்கி வைத்து பேசினார். விவசாய சங்க ஒன்றிய செயலாளர் சின்ன ராஜா கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.
எஸ் கே எம் ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் தெருமுனைப் பிரச்சாரத்தை நிறைவு செய்தார். நிகழ்ச்சியில் விஜயகுமார், இளங்கோவன், கலியபெருமாள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.