உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் மத்திய பாஜக அரசுக்கு கடும் கண்டனம்.
விவசாயிகளின் விளை பொருட்களுக்கு ஆதார விலையை நிர்ணயம் செய்யாத மத்திய பாஜக அரசை கண்டித்து உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கத்தின் தலைவர் வேலுசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்
மத்திய பாஜக அரசு மூன்றாவது முறையாக ஆட்சி பொறுப்பிற்கு வந்த பிறகு, 2024-25 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், விவசாயிகள் உற்பத்தி செய்த விளை பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அனைத்திற்கும் குறைந்தபட்ச ஆதார விலை உறுதி செய்யப்படும் என்று அறிவித்தனர்,
ஆனால் இதுவரையிலும் குறைந்த பட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்வதற்கு எந்தவிதமான நடவடிக்கையையும் மத்திய பாஜக அரசு எடுக்கவில்லை. நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் தங்கள் உரிமைக்காக போராடும் சூழ்நிலையே உள்ளது, இது மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக அரசுக்கு அழகல்ல.
விவசாயிகளின் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்யாத மத்திய பாஜக அரசை உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது என்பதை இந்த அறிக்கையின் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.
R . வேலுசாமி.
மாநிலத் தலைவர்.
உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம்.