தேனி மாவட்ட தமிழக அரசு எஸ்சி எஸ்டி ஓய்வு பெற்ற ஆசிரியர் நல சங்கம் சார்பில் தேனி எம்பி யிடம் பல்வேறு கோரிக்கைகள் குறித்த மனு தேனி மாவட்ட எஸ்சி எஸ்டி தமிழக அரசு ஊழியர் ஓய்வு பெற்ற நலச் சங்கம் சார்பில் அதன் தலைவர் கம்பம் புதுப்பட்டி க. சுப்பிரமணியன் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி யிடம் வழங்கிய கோரிக்கைகள் அடங்கிய மனு விபரம் போடிநாயக்கனூர் சென்னை சென்ட்ரல் வழி மதுரை திண்டுக்கல் சேலம் வழியாக வாரம் மூன்று முறை இயக்கப்படும் இரயிலை தினசரி இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் போடிநாயக்கனூர் சென்னை எக்மோர் வழி மதுரை திண்டுக்கல் திருச்சி வழியாக தினசரி இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் நாங்கள் ஏற்கனவே பாராளுமன்றத்தில் எழுப்பிய கோரிக்கையான திண்டுக்கல் குமுளி ரயில் பாதை அமைத்து தருவதை மத்திய அரசு உடனடியாக நாடாளுமன்றத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றி ரயில் பாதை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் திண்டுக்கல் குமுளி தேசிய நெடுஞ்சாலை தற்பொழுது இருவழிச் சாலையாக உள்ளதை நான்கு வழிச்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது மனுவை பெற்றுக் கொண்ட தேனி பாராளுமன்ற தொகுதி எம்பி இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாக உறுதி யளித்தார்.