என் சி ஐ சி பவுண்டேஷன், தேசிய குற்றவியல் விசாரணை ஆணையத்தின் தமிழ்நாடு இணை இயக்குனர் மதிப்புறு முனைவர் இ.ரவிந்தர் அவர்களுக்கு முத்தமிழ் விருது- 2024

சேலம் மாவட்டம் முத்தமிழ் சங்கம் சார்பாக நடைபெற்ற முத்தமிழ் விருது- 2024 சார்பாக என் சி ஐ சி பவுண்டேஷன், தேசிய குற்றவியல் விசாரணை ஆணையத்தின் தமிழ்நாடு இணை இயக்குனர் மதிப்புறு முனைவர் இ.ரவிந்தர் அவர்களுக்கு தமிழ் பணியை பாராட்டி முத்தமிழ் விருது 2024 ஓமலூர் தமிழ் சங்கம் கௌரவ தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அ.தமிழரசு மற்றும் பெரியார் பல்கலைக்கழகம் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் மு.தங்கராசு, மற்றும் சேலம் மாவட்டம் முத்தமிழ் சங்க நிறுவனத் தலைவர் கவிஞர் பொன் சந்திரன் ஆகியோர் பொற்கரங்கள் மூலம் வழங்கப்பட்டது. இவ்விழாவில் மு. ஸ்ரீரங்கன் கலந்து கொண்டார். விருது பெற்றமைக்கு எம் சி ஐ சி பவுண்டேஷன், தேசிய குற்றவியல் விசாரணை ஆணையத்தின் தமிழ்நாடு மாநில தலைவர் ஹரி கிஷோர் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் பாராட்டு தெரிவித்தனர்.
செய்தியாளர்:
A.ராஜபாண்டியன் மதுரை.