வலங்கைமான் ஸ்ரீ தையல்நாயகி சமேத ஸ்ரீ வைத்தீஸ்வரர் ஆலயத்தில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஸ்ரீ தையல்நாயகி சமேத ஸ்ரீ வைத்தீஸ்வரர் ஆலயத்தில் தேய்பிறை அஷ்டமி மகா கால பைரவாஷ்டமி என்றும் ஸ்ரீ பைரவர் ஜெயந்தி என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த சிறப்பு வாய்ந்த நன்னாளில் ஸ்ரீ பைரவ ஹோமம், மகா தீபாராதனை, கடம் புறப்பாடு, வாசனை திரவியத்தவுடன் சிறப்பு அபிஷேகம், கலஹாபிஷேகம், வடை மாலை அலங்காரத்தில் ஸ்ரீ பைரவ பெருமாள் அருள் பாலிப்பு, சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு அருட்பிரசாதம், அன்னதானம் வழங்குதல் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை அஷ்டமி வழிபாடு பக்தர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.