மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின், மாநகர் மாவட்ட 24-வது மாநாடு….
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின், மதுரை மாநகர் மாவட்ட 24-வது மாநாடு நேற்று நடந் தது. கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார்.
” மாநாட்டிற்கு தலைமை குழு உறுப்பினர்கள் நரசிம்மன், ஜென்னியம்மாள், பாவேல் சிந்தன், மோகன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாநகர் மாவட்ட செயலாளர் கணேசன் அரசியல் ஸ்தாபன மற்றும் வேலையறிக்கை, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கோவிந்தராஜன் வரவு செலவு அறிக்கைகளை சமர்ப்பித்தனர்.
இதில், மாநில செயற்குழு உறுப்பி னர்கள் சு.வெங்கடேசன் எம்.பி., கண்ணன், மாநில குழு உறுப்பினர்கள் விஜயராஜன், பொன்னுத்தாய், பாலா, புறநகர் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.