கல்வி மையத்தில் இந்திய அரசியல் சாசன தின உறுதிமொழி.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட தினமான நவம்பர் 26ஆம் தேதி இந்திய அரசியலமைப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. இத்தினம் முதல்முறையாக 2015ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டது.

இதனை நினைவுக்கூறும் வகையில் 75 ஆவது ஆண்டை போற்றும் வகையில் இன்று வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் முதல்வர் பா. சீனிவாசன் தலைமையில் மாணவர்கள் அரசியல் சாசன உறுதிமொழியை ஏற்றனர். மேலும் கல்வி மைய முதல்வர் பேசியதாவது:
இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் வரைவுக்குழுவின் தலைவராக செயல்பட்ட டாக்டர் அம்பேத்கரை கௌரவிக்கும் விதமாகவும், நினைவுக்கூறும் வகையிலும் மற்றும் இந்திய அரசியலமைப்புக்காக அயராது உழைத்த அனைவருக்கும் மரியாதை செய்யும் விதமாகவும் இந்திய அரசால், அரசியல் சாசன தினம் துவங்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது என்று வலியுறுத்தினார். மேலும் பங்கேற்ற மாணவர்களுக்கு வினாடி வினா நடைபெற்று நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டது.
செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.