அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் 26.11.2024 இன்று இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .S.செல்வராஜ் முன்னிலையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரியும் காவல்துறை அதிகாரிகள்,அமைச்சுப் பணியாளர்கள், காவலர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.
“இந்திய மக்களாகிய நாம் நம்நாட்டின் இறையான்மையும் சமநலச்சமுதாயமும் சமயச்சார்பின்மையும் மக்களாட்சி முறையும் அமைந்ததொரு குடியரசு நிறுவுவோம்”என உறுதி மொழி ஏற்றனர்.
உடன் அரியலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் .P.சிவகுமார் (தலைமையகம்), தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் .செல்வகுமாரி இருந்தார்கள்.
இதேபோன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் மற்றும் காவல் அலுவலகங்களிலும் காவல்துறையினர் இந்திய அரசமைப்பு தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்றனர்.