எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழி அரசு மருத்துவமனை எதிரே மாற்றுத்திறனாளிகள் அலுவலர் வராததை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் மழையில் நனைந்தபடி திடீர் சாலை மறியல். போலீசார் பேச்சுவார்த்தை.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அரசு மருத்துவமனையில்
மாதம் தோறும் நான்காவது செவ்வாய் கிழமை மாற்றுத்திறனாளிகள் முகாம் நடைபெறுவது வழக்கம் இன்று மாற்றுத்திறனாளிகள் முகாம் அறிவிக்கப்பட்ட நிலையில் 30 க்கும் ஏற்பட்ட மாற்றுத் திறனாளிகள் முகாமில் கலந்து கொள்வதற்காக சீர்காழி சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த மாற்றுத்திறனாளிகள் மருத்துவமனையில் காத்திருந்தனர்.
அப்போது மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலர் வராததால் மாற்றுத் திறனாளிகள் மாவட்ட செயலாளர் புருஷோத்தமன் தலைமையில் மயிலாடுதுறை சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த முகாமில் மாற்று திறனாளிகளுக்கான புதிய அடையாள அட்டை,பழைய அட்டை புதுப்பித்தல்,இலவச பேருந்து,ரயில் பயண அட்டை உள்ளிட்ட 21 வகையான சான்றுகள் இந்த முகாமில் கலந்து கொள்ளும் மாற்று திறனாளிகளுக்கு வழங்கப்படுகிறது.
நடைபெற இருந்த முகாமிற்க்கு மாற்று திறனாளிகள் அலுவலர்கள் வரததால் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த மாற்றுத்திறனாளிகள் தங்களை மாவட்ட அலுவலர் அலைக்கழிப்பதாக கூறி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.அப்பொழுது பெய்த சாரல் மழையில் நனைந்தவரே தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த சீர்காழி காவல் ஆய்வாளர் செல்வி சாலை மறியலில் ஈடுபட்டுள்ள மாற்றுத்திறனாளிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்.மாற்றுதிறனாளிகளின் திடீர் சாலை மறியலால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.