திருவாரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக வளாகத்தில் ஆண்களுக்கான நவீன தழும்பில்லாத குடும்ப நல சிகிச்சை முகாம் தொடர்பான விழிப்புணர்வு பிரச்சார வாகனம்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக வளாகத்தில் ஆண்களுக்கான நவீன தழும்பில்லாத குடும்ப நல சிகிச்சை முகாம் தொடர்பான விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தினை மாவட்ட ஆட்சியர் .தி.சாருஸ்ரீ கொடியசைத்து துவக்கி வைத்தார்
பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அனைத்து அரசு மருத்துவமனைகள் அனைத்து வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் ஆண்களுக்கான நவீன தழும்பிலாத குடும்ப நல சிகிச்சை முகாம் 04.12.2024 வரை நடைபெற்று வருகிறது. இம்முகாம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பிரச்சார வாகனமானது இன்றைய தினம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது
மேலும், இம்முகாமில் கலந்துகொண்டு தழும்பில்லாத குடும்ப நல சிகிச்சை (ஆண்களுக்கான நவீன கருத்தடை சிகிச்சை) பெற்று கொள்பவருக்கு அரசு ஊக்கத்தொகையாக ரூ.1100 வழங்கப்படுகிறது. குடும்ப நல சிகிச்சையானது மிக மிக எளியது பாதுகாப்பானது இந்நவீன குடும்ப நல சிகிச்சையானது (நவீன கருத்தடை சிகிச்சை முகாம்) நன்கு பயிற்சி பெற்ற சிறப்பு மருத்துவர்களால் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அனைத்து அரசு மருத்துவமனைகள் அனைத்து வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் செய்யப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தெரிவித்தார்.
நிகழ்வில் துணை இயக்குநர் (குடும்ப நலம்) (பொறுப்பு) மரு.உமா, மக்கள் கல்வி மற்றும் தகவல் அலுவலர் பன்னீர்செல்வம் புள்ளி விவர உதவியாளர் நதியா வட்டார சுகாதார புள்ளியிலாளர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்
