தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின்,
அரியலூர் மாவட்ட மையம்
சார்பில், இளநிலை,முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற விதித்திருந்திருந்த அரசானை யினை உடனே வெளியிட வேண்டும்,மூன்று ஆண்டுகளுக்கு மேற்பட்ட அலுவலக உதவியாளர் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் முதுநிலை வருவாய் ஆய்வாளர் பதவி உயர்வில் ஏற்பட்டுள்ள தேக்க நிலையை கலைந்து ஒருங்கி ணைந்த பணி முதுநிலை தொடர்பாக தெளிவுரைகளை வருவாய் நிர்வாக ஆணையர் உடனே வெளியிட வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் முதல் பணி புறக்கணிப்பு மற்றும் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இத்தொடர் காத்திருப்பு போராட்டத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் அரியலூர் மாவட்ட தலைவர் பாக்கியம் விக்டோரியா, மாவட்டத் துணைத் தலைவர் சரவணன்,மாவட்ட செயலாளர் செந்தில்குமார்,மாவட்ட இணைச் செயலாளர் ரமேஷ், சங்கத்தின் மத்திய செயற்குழு உறுப்பினர் சந்திரசேகர் உள்ளிட்ட வருவாய் துறையினர் பலர் கலந்து கொண்டனர்.