எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழியில் வருவாய்த்துறை அலுவலர்கள் பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் வருவாய் துறை பணியிடங்கள் தொடர்ந்து பறிபோவதாகவும், மூன்று ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள பணியிடங்களை விரைந்து நிரப்பிட வேண்டும் ,கருணை அடிப்படையில் ஆன பணி நியமனத்திற்கான உச்சவரப்பினை ஐந்து சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது
அதனை ரத்து செய்து மீண்டும் 25 சதவீதமாக நிர்ணயம் செய்திட வேண்டும் ,பேரிடர் மேலாண்மை பிரிவில் கலைக்கப்பட்ட 97 பணியிடலை உடனடியாக வழங்க வேண்டும், இரண்டு ஆண்டுகளுக்கான துணை ஆட்சியர் பட்டியல் மற்றும் நடபாண்டிற்கான மாவட்ட வருவாய் அலுவலர் பட்டியலை விரைந்து வெளியிட வேண்டம், பணியிடங்களை பாதுகாத்திட கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்றாம் கட்ட போராட்டம் நடைபெறுகிறது.
அனைத்து பணிகளையும் புறக்கணித்து வருவாய்த்துறை அலுவலர்கள், ஊழியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
அலுவலர்கள் போராட்டத்தினால் வட்டாட்சியர் அலுவலகத்தில் அன்றாட பணிகள் மற்றும் தற்போது பெய்து வரும் மழை பாதிப்பு குறித்த விவரங்கள் அரசுக்கு தெரியப்படுத்துவது பாதிக்கப்பட்டுள்ளது.