போச்சம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் மூன்றாம் கட்ட பணி புறக்கணிப்பு மற்றும் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த போராட்டத்திற்கு போச்சம்பள்ளி வட்ட கிளை தலைவர் அருள்குமார் தலைமை வகித்தார்.
இதில் இளநிலை முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற விதித்திருந்த அரசானையை உடன் வெளியிட வேண்டும், மூன்றாண்டுகளுக்கு மேற்பட்ட அலுவலக உதவியாளர் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், கருணை அடிப்படையிலான பணி நியமத்திற்கான உச்ச வரம்பினை 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதை ரத்து செய்து மீண்டும் 25 சதவீதமாக நிர்ணயம் செய்ய வேண்டும்,
இரண்டு ஆண்டுகளுக்கான துணை ஆட்சியர் பட்டியல் மற்றும் நடப்பாண்டிற்கான மாவட்ட வருவாய் அலுவலர் பட்டியலை விரைந்து வெளியிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.