திருவாரூர் நகராட்சி நகர மன்ற உறுப்பினர்கள் சாதாரண கூட்டம்… திருவாரூர் நகர மன்ற மாதாந்திர சாதாரண கூட்டம் நகர மன்ற உறுப்பினர்களின் கூட்ட அரங்கில் நடைபெற்றது . கூட்டத்திற்கு திருவாரூர் நகர மன்ற தலைவர் புவன பிரியா செந்தில் தலைமை வகித்தார்.
திருவாரூர் நகர மன்ற துணைத் தலைவர் அகிலா சந்திரசேகர் நகராட்சி ஆணையர் தாமோதரன் முன்னிலை வகித்தனர் சாதாரண கூட்டத்தில் நகர மன்ற உறுப்பினர்கள் தங்களின் வார்டுகளில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்றக் கூறியும் தற்போது உள்ள சூழ்நிலையில் பருவ மழை காரணமாக உடனடியாக நிறைவேற்றி பொதுமக்கள் சிரமம் இல்லாமல் இயல்பு வாழ்க்கை வாழ வேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள் கூட்ட நிகழ்வில். நகராட்சி மேலாளர் லதா நகராட்சி பொறுப்பு பொறியாளர் உள்பட அனைத்து பிரிவு அலுவலர்கள் உதவியாளர்கள் நகர மன்ற உறுப்பினர்கள் டீ. செந்தில். இரா.சங்கர் எஸ் என் அசோகன் எஸ் கலியபெருமாள் ரஜினி சின்னா அன்வர் சோலை புருஷோத்தமன் கருணாநிதி தினேஷ்குமார் அய்யனார் மூர்த்தி மலர்விழி கலியபெருமாள் சசிகலா சித்திவிநாயகம் ஆசைமணி ராமு ஷகிலா பானு ஐஸ்வர்யா பாஸ்கர் உள்பட நகர மன்ற கூட்டத்தில் பங்கேற்றனர். மேலும் சாதாரண கூட்டத்தில் 50க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன.