மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தமிழகம் முழுதும் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பாக மாபெரும் கடையடைப்பு போராட்டம்….
சமீபத்தில் வணிக பயன்பாட்டிற்கு உள்ள கட்டிடங்களுக்கு கொடுக்கும் வாடகைக்கு 18% GST வரி விதித்து மத்திய, மாநில செய்தி வெளியிட்டது. இதனால் அனைத்து வியாபாரிகளும் பாதிப்புக்கு உள்ள அவர்கள் என்ற கோரிக்கைகள் எழுந்தது. இதன் காரணமாக தமிழக முழுவதும் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பாக ஒரு நாள் மாபெரும் கடையடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது.
இதன் காரணமாக மதுரை திருமங்கலத்தில் தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கம் மற்றும் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பாக மாபெரும் கடையடைப்பு போராட்டம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம். திருமங்கலத்தில் உள்ள ராஜாஜி சிலை அருகில் நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்:
A. ராஜபாண்டியன் மதுரை.