புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட மறைமலை அடிகள் சாலை திடீர் நகர் பகுதியில் வசிக்கும் மக்கள் பெய்த கனமழை மற்றும் புயல் காரணமாக மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர்… அப்பகுதி மக்கள் இவ்விடத்தில் வசிக்க முடியாது எங்களுக்கு வேறு எங்காவது வீடு கட்டிக் கொடுங்கள் என சட்டமன்ற உறுப்பினர் திரு.G.நேரு(எ)குப்புசாமி MLA அவர்களிடம் தங்களின் ஆதங்கத்தை தெரியப்படுத்தினர்…
சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் இது பற்றி மாண்புமிகு முதல்வர் அவர்களிடத்தில் கலந்து பேசி தங்களுக்கான சரியான முடிவு எடுக்கப்படும் என்றும் நான் எந்த ஒரு முடிவும் எடுக்க முடியாது. என்று அப்பகுதி மக்களிடம் எடுத்து கூறினார்… மேலும் தற்போது தங்கள் நீங்கள் இருக்கும் சூழலுக்கு உணவு மற்றும் பாதுகாப்பான பள்ளிகளிலோ அல்லது மண்டபங்களிலோ தங்க வைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று அப்பகுதி மக்களிடம் கூறினார்