திருவாரூர் மாவட்ட இளைஞரணி சார்பில் நவம்பர் 27ல் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை பூண்டி.கே.கலைவாணன் அணிவித்தார்

திருவாரூர்,டிச-03. திருவாரூர் மாவட்ட இளைஞர் அணியின் சார்பில் கழக இளைஞரணி செயலாளர், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பிறந்த நாளாம் நவம்பர் 27ல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் திருவாரூர் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சி.கே.எழிலரசன் அவர்கள் ஏற்பாட்டில், தங்க மோதிரங்களை பூண்டி.கே. கலைவாணன் எம்.எல்.ஏ. அணிவித்து வாழ்த்தினார்

இந்த நிகழ்வுக்கு ஒன்றிய கழக செயலாளரும் ,ஒன்றிய பெருந்தலைவருமான புலிவலம் ஏ.தேவா தலைமை ஏற்க, மாவட்ட அமைப்பாளர் ஏ.எஸ்.குமார், துணை அமைப்பாளர்கள் வி.கே.முருகானந்தம்,எம்.பி.எடிசன், தாகிர் அலி , வினோத்குமார் ஆகியோர்முன்னிலை ஏற்றனர்.

மாவட்ட துணை அமைப்பாளர் சி.கே.எழிலரசன் அனைவரையும் வரவேற்றார்.சிறப்பு விருந்தினர்களாக நகர கழக செயலாளர் வாரை.எஸ்.பிரகாஷ், நகரக் கழக பொருளாளர் இளைஞர் அணி முன்னாள் துணை அமைப்பாளர் ரஜினி சின்னா, ஒன்றிய செயலாளர் ஐ.வி.குமரேசன் ,நகர செயலாளர் எஸ்.வி.பக்கிரிசாமி, பொதுக்குழு உறுப்பினர் டி.செந்தில், பேரூர் செயலாளர் பூண்டி.கலைவேந்தன், பொதுக்குழு உறுப்பினர் சி.கலியபெருமாள் மற்றும் கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இளைஞரணி செயலாளர், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பிறந்த நாளில் பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் தங்க மோதிரத்தை அணிவித்து அவர்களை வாழ்த்திய பூண்டி.கே.கலைவாணன் எம்.எல்.ஏ., பிறந்த குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்து சிறப்பிக்கும்படி வேண்டுகோளை வைத்தார். மேலும் மருத்துமனையில் இருந்த அனைத்து குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கும் இளைஞர் அணியின் சார்பில் ஊட்டச்சத்து பெட்டகங்கள் பரிசாக வழங்கப்பட்டது.

நகர இளைஞரணி சித்திவினாயகம், ஒன்றிய அமைப்பாளர் எம்.எஸ்.பிரகாஷ், நகர அமைப்பாளர் ரசின் பைசல், துணை அமைப்பாளர்கள் புருஷோத்தமன், சீரடி சாய், சுரேஷ், ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்ற விழாவில் மாவட்ட துணை அமைப்பாளர் கல்யாண சுந்தரம் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *