நாசரேத்தின் தந்தை எனப்படும் கனோன் ஆர்தர் மர்காஷிஸ் நாசரேத்திற்கு வருகை தந்தை நாளை பொதுமக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
கனோன் ஆர்தர் மர்காஷிஸ் அவர்கள் 1876 ஆம் ஆண்டுடிச 1ம் தேதி நாசரேத் வருகை புரிந்து மிஷனரி பணியும் துவங்கி உள்ளார். அவர் 1908 ஆம் ஆண்டு வரை நாசரேத்தில் மிஷனரி பணி செய்துள்ளார். நாசரேத்தில் பள்ளிக்கூடங்கள், தபால் நிலையம், ரயில், தொழிற் பயிற்சி பள்ளி, மருத்துவமனை, கிறிஸ்தவ தேவாலயம் போன்ற பல பணிகளை நிறைவேற்றியுள்ளார்.
நாசரேத்தை வளர்ச்சி பாதையில் வழி நடத்தியுள்ளார். இதன் காரணமாக அவர் நாசரேத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார். இந்த நிலையில், அவரது வருகை தினத்தை மக்கள் இனிப்பு வழங்கி உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். மேலும், நாசரேத் பேராலயத்தின் முன்பு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில், சபையின் பெரியவர்கள், வாலிபர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.