வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு உரிய உதவிகளை செய்து தரும் என்று மாநில துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, போச்சம்பள்ளி வட்டாரங்களில் பெய்த கன மழையின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நிவாரண பொருட்களை வழங்கினார். அவர்களுக்கு தற்காலிக தேவையான உணவு பொருட்கள், ஆடைகள், பிஸ்கட், போர்வைகள், மற்றும் மருந்து பொருட்களை வழங்கி அவர்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அவர்களிடம் உரையாற்றிய அவர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. போச்சம்பள்ளி, ஊத்தங்கரை வட்டாரங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை நிச்சயம் செய்து கொடுப்போம் என்று கூறினார்.
உடன் மாநில அமைச்சர் முத்துசாமி, மாவட்ட ஆட்சியர் சரயு, சட்டமன்ற உறுப்பினர்கள் பிரகாஷ், மதியழகன், உள்ளிட்டோர் இருந்தனர்.