ராஜபாளையம் பகுதியில் கொல்லங் கொண்டான் பெரிய கண்மாய் ஆக்கிரமிப்புகளால் அவதி! 800 ஏக்கர் நிலப்பரப்பில் நெல் வயல்களுக்கு தண்ணீர் கிடைக்காத அவலம்!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் பெரிய கண்மாய்களில் ஒன்றான கொல்லங் கொண்டான் பெரிய கண்மாய். இந்த கண்மாய் 1500 ஹெக்டேர் பரப்பளவில் பெரிய கண்மாயாக இது உள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து உற்பத்தியாகும் தேவதானம் நகரை ஆற்றில் இருந்து வரும் தண்ணீர் தேவியாறு வழியாக இந்த குளத்திற்கு தண்ணீர் வருவது வழக்கம். கொல்லங் கொண்டான் பெரிய கண்மாய் நிரம்பினால் தெற்குவெங்காநல்லூர், சிதம்பராபுரம், பட்டியூர், தேசிகாபுரம், சோழபுரம் கண்மாய்களுக்கு தண்ணீர் நிரம்பி கீழ ராஜகுலராமன் பெரிய கண்மாய்க்கு தண்ணீர் பிரித்து செல்லும் சூழல் உருவாகும். அந்த அளவிற்கு கொல்லங் கொண்டான் பெரிய கண்மாய் அமைந்துள்ளது. இந்த கண்மாயை நம்பி 800 ஏக்கர் நெல் வயல் உள்ளது.
இக் கண்மாயில் நீர் சேகரிக்கும் பரப்பு சிறிது சிறிதாக குறைந்து வருவது வருந்தத்தக்கது. இதற்கு காரணம் சுந்தர நாச்சியார்புரம், கிருஷ்ணாபுரம் கண்மாய் பகுதியில் பிளாஸ்ட்டிக் கழிவுகள், குப்பைகளையும் மண்ணையும் கொட்டி சிறிது சிறிதாக ஆக்கிரமிப்பு செய்து வருகிறார்கள்.
நீர் வரத்து கால்வாய்களும் குப்பைகள் மற்றும் புதர் மண்டி அடைபட்டுள்ளது அரசும் அதிகாரிகளும் இவ்வழியாக சென்று வரும் நிலை இருந்தாலும், யாரும் கண்டு கொள்வதில்லை. இதன் காரணமாக இந்த கொல்லம் கொண்டான் பெரிய கண்மாய் சிறிது சிறிதாக, சிறிய கண்மாயாக மாறும் அவலம் உருவெடுத்துள்ளது. உடனடியாக இந்த கண்மையை நம்பி விவசாயம் செய்யும் விவசாயிகள் மிகுந்த வேதனையில் உள்ளனர். அரசு அதிகாரிகளுக்கு கடிதங்கள் அனுப்பியும் எவ்வித நடவடிக்கையும் இல்லாத நிலையில் இந்த ஆக்கிரமிப்பு அமைந்துள்ளது. உடனடியாக இந்த கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர் வாரி விவசாயிகளுக்கு தண்ணீர் அதிகம் தேங்கும் நிலையை உருவாக்க வேண்டும் என 15 கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.