எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழியில் வர்த்தக நல சங்கம் சார்பில் வாடகை கட்டண ஜி.எஸ்.டி வரி உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தலைமை தபால் நிலையம் எதிரே வர்த்தக நல சங்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.
வணிகர்கள் வாடகை கட்டிடங்களில் தொழில் நடத்தி வரும் நிலையில் வாடகை தொகையில் ரூ.1 க்கு 18 காசு வரி செலுத்தக்கூறும் மத்திய அரசை கண்டித்தும், வாடகை கட்டண ஜிஎஸ்டி வரியினை மத்திய மாநில அரசுகள் நீக்க கோரி மத்திய அரசை கண்டித்து 20 க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.