அரூர் அடுத்த வள்ளிமதுரை அணை அருகே விபத்தில் அடிபட்டவருக்கு அரூர் எம்எல்ஏ வே.சம்பத்குமார் முதலுதவி சிகிச்சை அளிப்பு
தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த வள்ளி மதுரை அணை முதல் சித்தேரி சாலையில் , இன்று பிற்பகல் இருசக்கர வாகன ஓட்டிக்கு விபத்து ஏற்பட்டு அடிபட்டு சாலையில் கிடந்தார்.
அவ்வழியாகச் சென்ற அரூர் அதிமுக எம்.எல்.ஏ வே. சம்பத்குமார் , அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு பேருந்து மூலம் அனுப்பி வைத்தார் . இதில் அரூர் ஒன்றிய செயலாளர் ஆர்.ஆர். பசுபதி,தர்மபுரி அதிமுக துணை மாவட்ட செயலாளர் செண்பகம் சந்தோஷ்,மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.